ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் 100 சிக்சர்கள்: ரஸல்- கெய்லுக்கு அடுத்தப்படியாக துபே
- ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் 100 சிக்சர் விளாசிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சாதனையை துபே முறியடித்துள்ளார்.
- ஹர்திக் பாண்ட்யா 1046 பந்துகளில் 100 சிக்சர் விளாசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய சென்னை அணி 196 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் சிவம் துபே 13 பந்தில் 21 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரி 1 சிக்சர் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் 100 சிக்சர் விளாசிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சாதனையை துபே முறியடித்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா 1046 பந்துகளில் 100 சிக்சர் விளாசியுள்ளார். துபே 992 பந்துகளில் 100 சிக்சர்கள் விளாசி அசத்தியுள்ளார். ஒட்டு மொத்தமாக ரஸல் மற்றும் கெய்ல் ஆகியோருக்கு அடுத்தப்படியாக துபே உள்ளார்.
குறைந்த பந்தில் 100 சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் விவரம்:-
சிவம் துபே -992
ஹர்திக் பாண்ட்யா - 1046
ரிஷப் பண்ட் - 1224
யூசப் பதான் -1313
யுவராஜ் சிங் - 1332
ஒட்டுமொத்தமாக குறைந்த பந்தில் 100 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் விவரம்:-
ரஸல் - 657 பந்துகள்
கெய்ல் - 943 பந்துகள்
சிவம் துபே - 992 பந்துகள்
ஹர்திக் பாண்ட்யா - 1046 பந்துகள்
பொல்லார்ட் - 1094