ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை படைத்த இலங்கை
- ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இலங்கை அணி செப்டம்பர் 9-ம் தேதி வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது.
ஆசிய தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 291 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. அதாவது ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி இதனை இருமுறை செய்துள்ளது. பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளது.
இலங்கை அணி முதன் முறையாக இந்த சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 21 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
இலங்கை அணி செப்டம்பர் 9-ம் தேதி வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது.