கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி கோப்பையில் விளையாட வேண்டாம்- டெஸ்ட் அணியில் சர்பராஸ்கான் இடம் பெறாதது குறித்து கவாஸ்கர் காட்டம்

Published On 2023-06-24 12:22 GMT   |   Update On 2023-06-24 12:22 GMT
  • அவர் விளையாடும் 11 வீரர்களில் இருக்க வேண்டாம் ஆனால் அவரை அணியிலாவது எடுத்திருக்க வேண்டும்.
  • ரஞ்சி கோப்பை தொடரில் கடந்த 3 சீசன்களாக சர்பராஸ் கான் 100 ரன்களை கடந்து சராசரி வைத்துள்ளார்.

டெல்லி:

இந்திய கிரிக்கெட் அணி வரும் 12-ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

இதனிடையே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கான இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. டெஸ்ட் அணியில் புஜாராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் கெய்குவாட், எஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட 25 வயதான இளம் வீரர் சர்பராஸ் கானுக்கு மீண்டும் இடம் கிடைக்காதது பல்வேறு முன்னாள் வீரர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கான் இந்திய அணியில் சேர்க்காதற்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-

ரஞ்சி கோப்பை தொடரில் கடந்த 3 சீசன்களாக சர்பராஸ் கான் 100 ரன்களை கடந்து சராசரி வைத்துள்ளார். இந்திய அணியில் தேர்வாவதற்கு சர்பராஸ் கான் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்.

அவர் விளையாடும் 11 வீரர்களில் இருக்க வேண்டாம் ஆனால் அவரை அணியிலாவது எடுத்திருக்க வேண்டும். அவரது திறமைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பிசிசிஐ அவரிடம் கூற வேண்டும். இந்திய அணியின் தேர்வு முழுக்க முழுக்க ஐ.பி.எல் தொடரை சார்ந்தே இருக்கிறது. அதனால் இனிவரும் காலங்களில் சர்ஃபராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News