கிரிக்கெட் (Cricket)
null

15 பேர் கொண்ட இந்திய அணிக்கு டி.நடராஜன் தகுதியானவர்: கவாஸ்கர்

Published On 2024-05-01 10:57 GMT   |   Update On 2024-05-01 10:57 GMT
  • நடராஜன் டெத் ஓவர்களில் சிறப்பான முறையில் யார்க்கர் பந்துகள் வீசி வருகிறார்.
  • அவர் கடைசி நேரத்தில் கடினமான ஓவர்களை வீசுகிறார்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணியில் இருப்பார்கள் என்று கருதப்பட்ட சில வீரர்கள், சரியாக விளையாடாத காரணத்தினால் கழற்றி விடப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. அதேவேளையில் அனுபவம் வாய்ந்த சில வீரர்கள் சரியாக விளையாடாத நிலையிலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த டி. நடராஜன் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பிடிக்கு தகுதியானவர் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கவாஸ்கர் கூறுகையில் "நடராஜன் டெத் ஓவர்களில் சிறப்பான முறையில் யார்க்கர் பந்துகள் வீசி வருகிறார். ஐபிஎல் போட்டியில் இதுவரை 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 19.38 ஆகும். ஸ்டிரைக் ரேட் 12.92. ஆனால் ஓவருக்கு 9 ரன் என சற்று கூடுதலாக ரன் கொடுத்துள்ளார். அவர் கடைசி நேரத்தில் கடினமான ஓவர்களை வீசுகிறார். நடராஜன் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும்.

அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் நான் அவர் குறித்து அதிகமாக நினைக்கிறேன். அவர் மிகவும் அற்புதமாக பந்து வீசுகிறார்" என்றார்.

Tags:    

Similar News