கிரிக்கெட் (Cricket)

இந்தியாவுக்கு சாதகமான அட்டவணை: ஐசிசியை தாக்கிய மைக்கேல் வாகன்

Published On 2024-06-27 11:30 GMT   |   Update On 2024-06-27 11:30 GMT
  • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதிபெற்றது.
  • முதல் அரையிறுதிப் போட்டி கயானா மைதானத்தில் நடந்திருக்க வேண்டும் என மைக்கேல் வாகன் குற்றம்சாட்டினார்.

டிரினிடாட்:

டிரினிடாட் நகரில் இன்று காலை நடந்த முதல் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்செய்த ஆப்கானிஸ்தான் 56 ரன்னில் சுருண்டது.

அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதன்மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றது.

மற்றொரு அணி எது என்பதை தீர்மானிக்கும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் கயானா நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில், இந்த போட்டி டிரினிடாடில் நடந்திருக்க வேண்டும் என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

ஆப்கானிஸ்தான்-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட அரையிறுதிப் போட்டி கயானா மைதானத்தில் நடந்திருக்க வேண்டும். இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரையிறுதி போட்டி டிரினிடாட் நகரில் நடந்திருக்க வேண்டும்.

இந்தியாவுக்கு சாதகமான வகையில் ஐசிசி அட்டவணையை தயாரித்துள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது.

திங்கட்கிழமை இரவு செயின் வின்சென்டில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுகிறது. அதன்பின் அரையிறுதியில் விளையாட செவ்வாய்க்கிழமை டிரினிடாட் செல்ல 4 மணி நேரம் விமானம் தாமதமானது. இதனால் அவர்களுக்கு பயிற்சி செய்யவும், புதிய மைதானத்தில் பழகவோ நேரம் இல்லை என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

அதிகாலை 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா விளையாடினால் அதை பெரும்பாலான இந்திய ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என்பதால், கயானாவில் 2வது அரையிறுதி நடைபெறும் என ஐ.சி.சி. அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News