டி20 உலகக் கோப்பை: 125 ரன்களில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
- டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் விளையாடியது.
- இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன குர்பாஸ் 76 ரன்களிலும், இப்ராஹிம் சத்ரான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.
இதன் மூலம் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 76 ரன்கள் குவித்தார். உகாண்டா தரப்பில் அதிகபட்சமாக காஸ்மாஸ் கியூட்டா மற்றும் மாசாபா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் களமிறங்கிய உகாண்டா 16 ஓவர்களில் 58 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.