கிரிக்கெட் (Cricket)
டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்து அணிக்கு எதிராக 144 ரன்கள் சேர்த்தது வங்காளதேசம்
- டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- வங்காளதேச அணியில் அதிகபட்சமாக ஆபிப் உசைன் 38 ரன்கள் சேர்த்தார்.
ஹோபர்ட்:
டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஹோபர்ட்டில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஆபிப் உசைன் 38 ரன்கள் சேர்த்தார். நஜ்முல் உசைன் 25 ரன், மொசாடெக் உசைன் (20 நாட் அவுட்) ரன் சேர்த்தனர். நெதர்லாந்து தரப்பில் பால் வேன் மீகரென் பாஸ் டி லீட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.