கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவுக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கனடா

Published On 2024-06-02 03:22 GMT   |   Update On 2024-06-02 03:22 GMT
  • 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
  • தொடக்கம் முதல் கனடா அணி வீரர்கள் அதிரடி காட்டினர்.

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று தொடங்கியது. தொடக்க போட்டியில் அமெரிக்கா கனடா அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , கனடா முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்கம் முதல் கனடா அணி வீரர்கள் அதிரடி காட்டினர். அந்த அணியின் நவ்நீத் தலிவால்,நிக்கோலஸ் கிர்டன் ஆகியோர் அமெரிக்கா அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதமடித்தனர்.

தொடர்ந்து நவ்நீத் தலிவால் 61 ரன்களுக்கும் , நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.கடைசியில் ஷ்ரேயாஸ் மொவ்வா அதிரடி காட்டி 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 195 ரன்கள் இலக்குடன் அமெரிக்கா விளையாடுகிறது.

Tags:    

Similar News