கிரிக்கெட் (Cricket)

டி20 உலககோப்பை: கெய்லின் அதிக சிக்ஸர் சாதனையை முறியடித்து நிகோலஸ் பூரன் புதிய சாதனை

Published On 2024-06-23 07:42 GMT   |   Update On 2024-06-23 07:42 GMT
  • டி20 உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடிய கெய்ல் 16 சிக்ஸர்களை விளாசினார்.
  • டி20 உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள பூரன் 17 சிக்ஸர்களை விளாசி இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில், அமெரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் மோதின. முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 82 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இப்போட்டியில் 12 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 27 ரன்கள் குவித்தார் நிகோலஸ் பூரன். இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரின் ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் விளாசியவர் என்ற கெய்லின் சாதனையை பூரன் முறியடித்துள்ளார்.

2012 ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடிய கெய்ல் 16 சிக்ஸர்களை விளாசினார்.

2024 டி20 உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள பூரன் 17 சிக்ஸர்களை விளாசி இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பையில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள்

1. 2024 - நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்) - 227 ரன்கள் - 17 சிக்ஸர்

2. 2012 - கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) - 222 ரன்கள் - 16 சிக்ஸர்

3. 2012 - ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) - 249 ரன்கள் - 15 சிக்ஸர்

4. 2012 - மார்லன் சாமுவேல்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 230 ரன்கள் - 15 சிக்ஸர்

5. 2016 - தமீம் இக்பால் (வங்காளதேசம்) - 295 ரன்கள் - 14 சிக்ஸர்

6. 2021 - பட்லர் (இங்கிலாந்து) - 269ரன்கள் - ௧௩ சிக்ஸர்

Tags:    

Similar News