null
டி20 உலகக் கோப்பை அரையிறுதி: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு
- டி20 அரையிறுதி போட்டிக்கு ஆப்கன் அணி முதல் முறையாக தகுதி பெற்றது.
- இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடுகின்றன.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்கிறது.
ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த தொடரில் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை ஆப்கன் அணி வெளிப்படுத்தி வந்தது.
உலகக் கோப்பை தொடர் துவங்கும் முன்பே, ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான பிரைன் லாரா தெரிவித்து இருந்தார்.
அந்த வகையில் தனது முதல் அரையிறுதியில் விளையாடும் ஆப்கன் அணி வெற்றி பெறும் முனைப்பிலும், பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பிலும் விளையாடுகின்றன.