கிரிக்கெட் (Cricket)

ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்ட கைல் மேயர்ஸ்

null

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2022-06-28 05:16 GMT   |   Update On 2022-06-28 06:15 GMT
  • வங்காளதேசத்திற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
  • வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

செயின்ட்லூசியா:

வெஸ்ட்இண்டீஸ்-வங்காள தேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிராஸ் ஐலெட் மைதானத்தில் நடந்தது.

வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 234 ரன்னில் 'ஆல்அவுட்'ஆனது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங் சில் 408 ரன் குவித்தது. கெய்ல் மேயர்ஸ் 146 ரன்கள் எடுத்தார்.

174 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காள தேசம் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து இருந்தது.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 186 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட்இண்டீசுக்கு 13 ரன் மட்டுமே இலக்காக இருந்தது.

நுருல்ஹசன் அதிகபட்சமாக 60 ரன் எடுத்தார். கேமர்ரோச், அல்ஜாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.

வெஸ்ட்இண்டீஸ் அணி 2.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏற்கனவே முதல் டெஸ்டிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

அடுத்து இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 2-ந்தேதி நடை பெறுகிறது. ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் கைல் மேயர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து இரு அணிகளும் டி20 தொடரிலும் ஒருநாள் தொடரிலும் மோத உள்ளது. முதல் டி20 போட்டி ஜூலை 2-ந் தேதி நடக்கிறது.

Tags:    

Similar News