கிரிக்கெட் (Cricket)

சர்வதேச போட்டியில் 500 விக்கெட்- 5 ஆயிரம் ரன் எடுத்து ஜடேஜா புதிய சாதனை

Published On 2023-03-02 07:00 GMT   |   Update On 2023-03-02 07:00 GMT
  • சாதனை படைத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார்.
  • டெஸ்டில் 2623 ரன்னும், ஒரு நாள் ஆட்டத்தில் 2447 ரன்னும், 20 ஓவரில் 457 ரன்னும் ஆக மொத்தம் சர்வதேச போட்டியில் 5527 ரன் எடுத்துள்ளார்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின்போது ஜடேஜா புதிய சாதனை நிகழ்த்தினார்.

34 வயதான ஜடேஜா நேற்றைய தொடக்க நாளில் 4 விக்கெட் கைப்பற்றினார். முதல் விக்கெட்டான டிரெவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்தபோது சர்வதேச போட்டியில் 500 விக்கெட்டை தொட்டார். 500 விக்கெட் வீழ்த்தி, 5 ஆயிரம் ரன்களை எடுத்து அவர் சாதனை படைத்தார். இத்தகைய சாதனை படைத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். முதல் வீரர் கபில்தேவ் ஆவார்.

ஜடேஜா 63 டெஸ்டில் 263 விக்கெட்டும், 171 ஒரு நாள் போட்டியில் 189 விக்கெட்டும், 64 இருபது ஓவர் ஆட்டத்தில் 51 விக்கெட்டும் ஆக மொத்தம் சர்வதேச போட்டியில் 503 விக்கெட் வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் 2623 ரன்னும், ஒரு நாள் ஆட்டத்தில் 2447 ரன்னும், 20 ஓவரில் 457 ரன்னும் ஆக மொத்தம் சர்வதேச போட்டியில் 5527 ரன் எடுத்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் 500 விக்கெட் மற்றும் 5 ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்த வீரர்கள் விவரம்:-

கபில்தேவ், ரவீந்திர ஜடேஜா (இந்தியா), ஜேக் காலிஸ், போல்லாக் (தென் ஆப்பிரிக்கா), இம்ரான்கான், வாசிம் அக்ரம், அப்ரிடி (பாகிஸ்தான்), இயன் போத்தம் (இங்கிலாந்து), சமிந்தா வாஸ் (இலங்கை), டேனியல் வெட்டோரி (நியூ சிலாந்து), ஷகீப் அல் ஹாசன் (வங்காளதேசம்).

Tags:    

Similar News