கிரிக்கெட் (Cricket)
அயர்லாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி
- ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
- முதல் போட்டியில் அயர்லாந்தும், 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன.
ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 72 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய அயர்லாந்து 17.2 ஓவரில் 98 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஒமர்சாய் 4 விக்கெட்டும், நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் அயர்லாந்தும், 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன.