கிரிக்கெட் (Cricket)

6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே செல்கிறது

Published On 2022-07-21 07:51 GMT   |   Update On 2022-07-21 07:51 GMT
  • ஜிம்பாப்வே தொடருக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22-ந்தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் ஹராரேயில் நடக்கிறது.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் உள்ளது. அந்த அணியுடன் 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் ஆகஸ்ட் 7-ந்தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் இந்திய அணி 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே செல்கிறது.

அந்த அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22-ந்தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் ஹராரேயில் நடக்கிறது.

ஜிம்பாப்வே தொடருக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் மாதம் ஆஸ்ரேலியாவில் நடக்கிறது.

இதற்காக இந்திய அணி முழு வீச்சில் தயார் செய்ய இந்த சுற்றுப்பயணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு கேப்டன் நியமனம் இருக்கிறது.

Tags:    

Similar News