கிரிக்கெட் (Cricket)

ஸ்டூவர்ட் பிராட் - பும்ரா - யுவராஜ்

அன்று யுவராஜ்- இன்று பும்ரா: ஸ்டூவர்ட் பிராட்டின் மோசமான சாதனை

Published On 2022-07-02 12:00 GMT   |   Update On 2022-07-02 12:00 GMT
  • ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84 ஓவரில் 35 ரன்கள் விட்டு கொடுத்தார்.
  • டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை பிராட் படைத்துள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 338 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று 2-நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 416 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இந்த டெஸ்டில் பல்வேறு சாதனைகள் அரங்கேறியது. ஜடேஜா-பண்ட் ஆகியோர் சாதனைகள் படைத்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் பும்ராவும் தனது பங்கிற்கு பேட்டிங்கில் ஒரு சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை எட்டினார்.

ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84 ஓவரில் 35 ரன்கள் விட்டு கொடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை பிராட் படைத்துள்ளார்.

இதேபோல் 2007-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் பிராட் வீசிய ஓவரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் 36 ரன்கள் குவித்தார். இந்த பந்து வீச்சு டி20 வரலாற்றில் மோசமான சாதனையாக பதிவு செய்யப்பட்டது. அதே பாணியில் தற்போது டெஸ்ட் போட்டியிலும் பிராட் அதிக ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

Tags:    

Similar News