null
டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது உகாண்டா- வெளியேறியது ஜிம்பாப்வே
- 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
- ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தகுதி சுற்று அடிப்படையில் இதுவரை 7 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா ஆகிய நாடுகள் ஆகும். மீதமுள்ள 1 இடத்திற்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.
One for the history books ✍️
— FanCode (@FanCode) November 30, 2023
Uganda are going to their first-ever ICC World Cup! They qualify for the 2024 T20 World Cup along with Namibia. ???
.
.#T20WorldCup2024 pic.twitter.com/M4kZVhEhU6
இந்நிலையில் உகாண்டா அணி டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதன் மூலம் உகாண்டா அணி முதல் முறையாக ஐசிசி தொடர்களில் தகுதி பெற்றுள்ளது.