null
பாகிஸ்தான் ரசிகர்கூட 'பாரத் மாதா கீ ஜே' னு தான் சொல்லணுமா? வைரல் வீடியோ
- பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷமிட வேண்டாம் என்று கூறி ஒரு போலீஸ் அதிகாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- காவல்துறை அதிகாரியை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உலகக் கோப்பை போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகரை "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷமிட வேண்டாம் என்று கூறி ஒரு போலீஸ் அதிகாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அந்த ரசிகர் 'இந்திய ரசிகர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிடும்போது, நான் ஏன் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிட கூடாது?' என்று கேட்டார்.
அதற்கு அதிகாரி மீண்டும் 'அப்படி சொல்லகூடாதுதான்' என கூறினார்.
உடனே அந்த ரசிகர் அந்த அதிகாரியின் பதிலை தனது தொலைபேசியில் வீடியோ பதிவு செய்ய முயற்சித்தார். மேலும் அந்த ரசிகர், "பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா போட்டியைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது நான் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்ல கூடாதா?" என மீண்டும் கேட்டார். இதற்கு பதில் அளிக்காமல் அந்த இடத்தை விட்டு போலீஸ் அதிகாரி நகர்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தனது நாட்டு அணியினரை உற்சாகப்படுத்த ஒரு ரசிகர் அனுமதிக்கப்படாதது "வெட்கக்கேடானது" என்று அந்த காவல்துறை அதிகாரியை கடுமையாக சாடி வருகின்றனர்.