கிரிக்கெட்

டி20 போட்டிகளில் அதிக அரை சதம்: பாபர் அசாம் சாதனையை சமன்செய்த விராட் கோலி

Published On 2024-06-29 15:59 GMT   |   Update On 2024-06-29 15:59 GMT
  • 4வது விக்கெட்டுக்கு விராட் கோலி, அக்சர் பட்டேல் ஜோடி 72 ரன்கள் சேர்த்தது.
  • சிறப்பாக ஆடிய விராட் கோலி அரை சதமடித்தார்.

பார்படாஸ்:

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி பார்படாசில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் டக் அவுட் ஆனார். அப்போது இந்தியா 1.6 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன் எடுத்து வெளியேறினார். அப்போது இந்தியா 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து இறங்கிய அக்சர் பட்டேல் கோலியுடன் இணைந்தார். பவர் பிளேயின் முதல் 6 ஓவரில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்தது. இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில் அக்சர் பட்டேல் 47 ரன்னில் அவுட்டானார்.

இந்நிலையில், விராட் கோலி அரை சதம் கடந்தார். இது அவரது 39-வது அரை சதமாகும். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்த பாபர் அசாம் சாதனையை சமன் செய்துள்ளார்.

Tags:    

Similar News