கிரிக்கெட் (Cricket)

விராட் கோலி அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்- இங்கிலாந்து முன்னாள் கேப்டன் சொல்கிறார்

Published On 2023-03-17 05:05 GMT   |   Update On 2023-03-17 05:05 GMT
  • எந்த சூழ்நிலையிலும் ரன் குவிக்க கூடிய அபாரமான பேட்ஸ்மேன் விராட் கோலி.
  • அவர் தனது திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

லண்டன்:

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் காலிங்வுட் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவர் தனது திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்.

விராட் கோலி தற்போது அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் ரன் குவிக்க கூடிய அபாரமான பேட்ஸ்மேன் ஆவார்.

ரிஷப்பண்ட்டும் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவர் விளையாடும் விதம் அருமையாக இருக்கும். துரதிருஷ்டவசமாக அவர் விபத்தில் காயம் அடைந்துள்ளார். அவரை மீண்டும் களத்தில் காண விரும்புகிறேன். கிரிக்கெட் உலகிற்கு அவர் மிகவும் தேவைப்பட்டவர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விராட்கோலி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் சதம் (186 ரன்) அடித்தார். 1205 நாட்களுக்கு பிறகு அவர் டெஸ்டில் செஞ்சுரி அடித்தார். சர்வதேச போட்டியில் அவர் 75 சதம் எடுத்துள்ளார்.

விராட கோலி 110 சதங்கள் குவித்து டெண்டுல்கரின் 100 சர்வதேச செஞ்சுரி சாதனையை முறியடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் தெரிவித்து இருந்தார். தற்போது கோலியின் பேட்டிங் திறமையை காலிங் வுட் பாராட்டி உள்ளார்.

Tags:    

Similar News