ஐபிஎல் 2024: பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்திய ஆர்சிபி
- ஆர்சிபி அணியின் ஏற்கனவே தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய நிலையில் அவர்களது 2-வது ஜெர்சியை இன்று அறிமுகப்படுத்தியது.
- 2011-ம் ஆண்டு ஆர்சிபி பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நாளமறுநாள் தொடங்க உள்ளது. 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது. ஒவ்வோரு அணியும் ஜெர்சி தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்து அணியும் தங்களது வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவையும் அவ்வது பதிவிட்டு வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஏற்கனவே தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய நிலையில் அவர்களது 2-வது ஜெர்சியை இன்று அறிமுகப்படுத்தியது. அதுமட்டுமல்லாம அதற்கான உபகரணங்களும் அணி வீரர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு ஆர்சிபி பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது. அப்போது முதல் இப்போ வரையும் சில போட்டிகளில் பச்சை நிற ஜெர்சியுடன் விளையாடுவதை வழக்கமாக ஆர்சிபி அணி கொண்டுள்ளது.
2011 முதலே ஆர்சிபி "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது. இதன் மூலமாக வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை தருகிறது.