கிரிக்கெட் (Cricket)

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகிறார் வி.வி.எஸ். லட்சுமண்

Published On 2023-11-23 06:08 GMT   |   Update On 2023-11-23 06:08 GMT
  • ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.
  • தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்க டிராவிட் விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார். இந்தியாவில நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடரோடு அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வென்றால், ராகுல் டிராவிட் தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

தோல்வியடைந்ததால் எதிர்காலம் குறித்து என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது அதுகுறித்து யோசிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வி.வி.எஸ். லட்சுமண் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராகலாம் எனத் தெரிகிறது.

ராகுல் டிராவிட் தனது பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்ள விரும்பவில்லை. குறிப்பாக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை என பிசிசிஐ-யிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளையில் விவிஎஸ் லட்சுமண் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட் அணியுடன் பயணம் செய்ய முடியாத நிலையில், விவிஎஸ் லட்சுமண் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். இன்று தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதரான டி20 தொடருக்கான இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இருக்கிறார்.

ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்தியா மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 50 ஓவர் உலகக் கோப்பை (2023) இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய போதிலும், சாம்பியன் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது.

Tags:    

Similar News