கிரிக்கெட்
null

ட்ரோல் செய்தவரை இந்தியர் என நினைத்து அடிக்க சென்ற ஹரிஸ் ராஃப் - வைரலாகும் வீடியோ

Published On 2024-06-18 11:18 GMT   |   Update On 2024-06-18 11:20 GMT
  • டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது.
  • இதனால் பாகிஸ்தான் வீரர்கள் சில கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

புளோரிடாவில் உள்ள ஒரு நகரத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப் தனது மனைவியுடன் பேசியவாறு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஒருவர் ஹரிஸ் ராஃப்பை பார்த்து ஏதோ சொல்ல உடனே கோபமடைந்த ராஃப், அந்த நபரை தாக்குவதற்காக செருப்பை கூட கழற்றி விட்டு ஓடினார்.

இதனை பார்த்த அவரது மனைவி ஹரிசை சமாதானம் படுத்த முயற்சித்தார். ஆனால் ஹரிஸ் அந்த நபரிடம் சென்று வார்த்தை போரில் ஈடுப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஹரிஸ், டிரோல் செய்தவர் ஒரு இந்தியராக இருக்க வேண்டும். என்றும் குறிப்பிட்டு இருந்தார். உடனே அந்த நபர் நான் பாகிஸ்தானை சேர்ந்தவர் என பதிலளித்தார்.

வாக்குவாதம் தொடர்ந்ததால் ரஃப்பின் மனைவி அவரை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் ஹரிஸ் அந்த நபருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறிய பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் சில கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

Tags:    

Similar News