மன்கட் அவுட்.. கோபத்தில் பேட்டை தூக்கி எறிந்த வீரர்.. வைரலாகும் வீடியோ
- அவர் 43 ரன் எடுத்திருந்த போது மன்கட் முறையில் அவுட் செய்யப்பட்டார்.
- கிளேர்மான்ட் அணி 214 ரன்களில் சுருண்டது.
ஆஸ்திரேலியாவில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டியின் போது, நான்-ஸ்ட்ரைக்கர் முடிவில் ஒரு பேட்டர் ரன்-அவுட் ஆனார். ஆட்டமிழந்த ஆத்திரத்தில் அவர் தனது பேட் மற்றும் கையுறைகளை தூக்கி எறிந்து கோபத்துடன் களத்தில் இருந்து வெளியேறினார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு உள்நாட்டுப் போட்டியில் கிளேர்மொன்ட் மற்றும் நியூ நோர்ஃபோக் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் பந்து வீச்சாளர் கிரீஸை விட்டு வெளியேறிய நான்-ஸ்ட்ரைக்கர் அவுட் செய்தார்.
இதற்கான முடிவு மூன்றாவது நடுவருக்கு அனுப்பப்பட்டது. முடிவில் அவர் அவுட் என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவால் கோபமடைந்த அவர் பெவிலியனுக்குத் திரும்பும் போது தனது பேட் மற்றும் கையுறைகளை தூக்கி எறிந்தார். இது களத்தில் இதுவரை கண்டிராத சில காட்சிகளுக்கு வழிவகுத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூ நார்போக் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கிளேர்மான்ட் அணி 214 ரன்களில் சுருண்டது. அணியில் அதிகபட்சமாக ஜாரோட் கேய் (43), ரிக் மார்ட்டின் (70) ரன்களை எடுத்தனர். நான்-ஸ்ட்ரைக்கர் முடிவில் ரன்-அவுட் ஆன கேய் அரை சதத்தையாவது தவறவிட்டார்.