கிரிக்கெட் (Cricket)

பும்ராவின் குழந்தைக்கு பரிசு வழங்கிய பாகிஸ்தான் வீரர்- வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

Published On 2023-09-11 05:18 GMT   |   Update On 2023-09-11 05:18 GMT
  • இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் சகோதரர்களாக அன்பை பரிமாறிக் கொண்டது ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • நேற்று மழையால் நிறுத்தப்பட்ட இந்தப் போட்டி தொடர்ந்து இன்று நடக்கிறது. ராகுலும், கோலியும் தொடர்ந்து ஆடுவார்கள்.

கொழும்பு:

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கொழும்பில் நேற்று மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து இருந்த போது மழையால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

விராட்கோலி 8 ரன்னுட னும், கே.எல்.ராகுல் 17 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். சுப்மன்கில் 52 பந்தில் 58 ரன்னும் (10 பவுண்டரி), கேப்டன் ரோகித் சர்மா 49 பந்தில் 56 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

மழையால் நிறுத்தப்பட்ட இந்தப் போட்டி தொடர்ந்து இன்று நடக்கிறது. ராகுலும், கோலியும் தொடர்ந்து ஆடுவார்கள்.

மழையால் போட்டி பாதிக்கப்பட்ட போது இந்திய வேகப்பந்து வீரர் ஜஸ்பிரீத் பும்ராவை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி வாழ்த்தினார். பும்ராவுக்கு கடந்த 4-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இதையொட்டி பும்ரா அருகே சென்று அப்ரிடி அவரிடம் பிறந்த குழந்தைக்கு பரிசு ஒன்றை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இருவரும் ஒருவருக்கொருவர் கைக் குலுக்கி கொண்டனர்.

இந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் சகோதரர்களாக அன்பை பரிமாறிக் கொண்டது ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

Similar News