சூர்யகுமார் யாதவ் அரை சதம் - வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
- டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி முதலில் ஆடிய இந்தியா 165 ரன்கள் எடுத்தது.
புளோரிடா:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 45 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 61 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 27 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 4 விக்கெட்டும், அகீல் ஹொசைன், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.