கிரிக்கெட்
null

இன்னமும் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்... முகமது ஷமி ஆதங்கம்

Published On 2024-07-20 04:50 GMT   |   Update On 2024-07-20 06:21 GMT
  • வாய்ப்பு கிடைக்கும்போதுதான் என்னை நிரூபிக்க முடியும்.
  • நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள். நான் மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தினேன்.

ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியர்களின் பட்டியலில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார்.

வெறும் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடி 55 விக்கெட்களை முகமது ஷமி வீழ்த்தியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்தில் அவர் உள்ளார்.

ஆனால், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் காயம் காரணமாக முகமது ஷமி இடம்பெறவில்லை.

இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து யூடியூபர் சுபாங்கர் மிஸ்ராவிற்கு முகமது ஷமி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் முதல் சிலபோட்டிகளில் நான் விளையாடவில்லை. அடுத்த ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்களையும், பின் ஐந்து மற்றும் 4 என அடுத்தடுத்த போட்டிகளில் விக்கெட்களை எடுத்தேன். 2023 ஆம் ஆண்டும் இதே போன்று நடந்தது. முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை. பின் அதிகமான விக்கெட்களை வீழ்த்தினேன்.

நான் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு அணிக்கும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் தேவைதான். மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளேன். என்னிடம் இருந்து இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள். என்னிடம் அதற்கான கேள்விகளும் இல்லை, பதில்களும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதுதான் என்னை நிரூபிக்க முடியும். நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள். நான் மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தினேன்" என தெரிவித்துள்ளார்.

2019 உலகக் கோப்பையில் விராட் கோலியின் தலைமையில் முகமது ஷமி விளையாடினார். அப்போது ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார்.

Tags:    

Similar News