கிரிக்கெட் (Cricket)

இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடக்குமா? ரோகித் பதில்

Published On 2024-05-15 11:09 GMT   |   Update On 2024-05-15 11:09 GMT
  • சிறந்த பவுலிங், பேட்டிங் என நல்ல அணியாக பாகிஸ்தான் உள்ளது.
  • ஒரு கிரிக்கெட் வீரராக சவால்களை சந்திக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

புதுடெல்லி:

பாகிஸ்தானுடன் 2012-13-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. ஐ.சி.சி. உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டும் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது. மற்றபடி இரு நாட்டு தொடருக்கு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி மத்திய அரசு அனுமதி மறுக்கிறது.

நேரடி தொடர் என்று பார்த்தால் பாகிஸ்தான் அணி கடைசியாக 2012-13-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்து ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. அதே சமயம் இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடக்குமா என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்தியா -பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் எந்தளவுக்கு உள்ளது என தெரியவில்லை. ஆனால், ஒரு கிரிக்கெட் வீரராக சவால்களை சந்திக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

சிறந்த பவுலிங், பேட்டிங் என நல்ல அணியாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் போட்டிகள் நடந்தால் ரசிகர்கள் அதை மிகவும் விரும்புவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.சி.சி. தொடர்களை தவிர்த்து இந்தியா- பாகிஸ்தான் இடையே இரு நாட்டு போட்டிகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று ரோகித் சர்மா சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News