கிரிக்கெட் (Cricket)

கேன் வில்லியம்சன்

3வது டி20 போட்டியில் இருந்து வில்லியம்சன் விலகல்- டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என தகவல்

Published On 2022-11-21 05:26 GMT   |   Update On 2022-11-21 09:09 GMT
  • வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் நியூசிலாந்து அணியில் இடம் பெறுகிறார்.
  • ஆக்லாந்து ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைகிறார்.

நேப்பியர்

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை மருத்துவரை சந்திப்பதற்காக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவரது முழங்கை வலி பிரச்சினைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும், நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

எங்கள் வீரர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்லாந்தில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3வது டி20 போட்டியில் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News