மகளிர் ஆசிய கோப்பை: வங்காளதேசம் அபார வெற்றி
- தாய்லாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
- சிறப்பாக பந்துவீசிய ரபீயா கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் தாய்லாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய தாய்லாந்து அணி வங்காளதேசம் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தாய்லாந்து அணியின் நட்டயா பூச்சாத்தம் (40 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதன் காரணமாக தாய்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களையேசேர்த்தது. வங்காளதேசம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரபீயா கான் 4 விக்கெட்டுகளையும் சபிகுன் நஹர் ஜெஸ்மின் மற்றும் ரிது மோனி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
97 எனும் எளிய இலக்கை துரத்திய வங்காளதேசம் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை குவித்தது. இதன் மூலம் வங்காளதேசம் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியின் திலாரா அக்தர் 17 ரன்களையும், முர்சிதா கதுன் 50 ரன்களையும், இஷாமா தன்ஜிம் 16 ரன்களையும் சேர்த்தனர்.