கிரிக்கெட் (Cricket)

ஹர்திக் பாண்ட்யாவை சாடிய பீட்டர்சன்: என்ன சொன்னார் தெரியுமா?

Published On 2024-04-23 07:47 GMT   |   Update On 2024-04-23 07:47 GMT
  • நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின.
  • இதில் ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூர்:

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.

ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் சதமடிக்க 18.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி நடப்பு தொடரில் 5-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறுகையில், கோட்சி முதலில் பந்து வீசுகையில் ஜெய்ஸ்வால் நிறைய ரன்களை அடித்து விடுகிறார். இதனால் 2வது ஓவரை வீச கோட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இது பாண்ட்யாவின் மோசமான கேப்டன்சிக்கு  உதாரணமாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News