null
இங்கிலாந்துக்கு எதிராக சதமடிக்க டோனிதான் காரணம்- ஷாய் ஹோப் புகழாரம்
- வெற்றி பெற்ற போட்டியில் என்னுடைய சதம் வந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
- சில காலங்கள் முன்பாக நான் டோனியிடம் பேசினேன்.
வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்கான முதல் போட்டி நேற்று ஆன்ட்டிகுவா நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 71, ஜாக் கிராவ்லி 48 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 48.5 ஓவரிலேயே இலங்கை எட்டியது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சதம் விளாசிய ஷாய் ஹோப் (109) ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக இந்திய ஜாம்பவான் டோனியுடன் பேசிய போது அவர் கொடுத்த சில ஆலோசனைகள் இப்போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியதாக சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வெற்றி பெற்ற போட்டியில் என்னுடைய சதம் வந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது. சில காலங்கள் முன்பாக நான் டோனியிடம் பேசினேன். அப்போது நீங்கள் நினைப்பதை விட எப்போதுமே உங்களுக்கு களத்தில் அதிக நேரம் இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அந்த வார்த்தைகள் என்னுடன் ஒட்டிக்கொண்டது.
செபார்ட் சிறப்பாக விளையாடினார். இத்தொடரின் ஆரம்பத்திலேயே வெற்றியை பெற்றுள்ள நாங்கள் அதை அடுத்த போட்டியிலும் தொடர்வோம் என்று நம்புகிறேன். எங்களின் தொடக்க வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். இதே போன்ற துவக்கத்தை அடுத்த போட்டியில் அவர்கள் கொடுக்க முயற்சிக்க வேண்டும். இருப்பினும் உலகின் சிறந்த அணியாக நீங்கள் இருப்பதற்கு சில கேட்ச்களை தவற விடக்கூடாது. இதே நல்ல செயல்பாடுகளை நாங்கள் அடுத்த போட்டிகளிலும் தொடர்வதற்கு பார்க்க வேண்டும்.
என்று கூறினார்.