கிரிக்கெட் (Cricket)
null

என் வரலாறு படமானால் இவர்தான் ஹீரோ - யுவ்ராஜ் சிங்

Published On 2024-01-17 07:29 GMT   |   Update On 2024-01-18 12:11 GMT
  • சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது
  • விரைவில் திரைப்படம் குறித்து நல்ல செய்தி அளிப்பேன் என்றார் யுவ்ராஜ்

இந்தியர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டிலும், சாதனை படைக்கும் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றிலும் அதிக ஆர்வம் உண்டு.

கிரிக்கெட்டில் சாதனை புரிந்த பல முன்னாள் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வரவேற்பை பெறுகிறது.

கபில் தேவ், மகேந்திர சிங் தோனி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவானது.

இந்திய கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டக்காரராக உலக அளவில் சாதனை புரிந்தவர் முன்னாள் வீரர், யுவ்ராஜ் சிங் (Yuvraj Singh). கிரிக்கெட்டில் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்விலும் பல சோதனைகளை சந்தித்து வெற்றி பெற்றவர் அவர்.

அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து பேசிய அவரிடம், "தற்போது உள்ள கதாநாயகர்களில் உங்கள் வேடத்தில் எவர் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?" என யுவ்ராஜ் சிங்கிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளித்ததாவது:

சமீபத்தில் நான் "அனிமல்" திரைப்படம் பார்த்தேன். அதில் ரன்பீர் சிங் நடிப்பை கண்டதிலிருந்து எனது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால், திரையில் என்னை பிரதிபலிக்க அவர்தான் பொருத்தமாக இருப்பார் எனும் முடிவில் உள்ளேன். ஆனால், அது இயக்குனரின் முடிவை பொறுத்தது. இது சம்பந்தமான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்து நல்ல செய்தி அளிப்பேன்.

இவ்வாறு யுவ்ராஜ் சிங் கூறினார்.


2011ல் யுவ்ராஜ் சிங்கிற்கு நுரையீரலில் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்று, குணமடைந்து, நாடு திரும்பி மீண்டும் சில மாதங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி ஓய்வு பெற்றவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News