ஆன்மிக களஞ்சியம்

இறைவனின் திருவடியை இம்மலையில் இன்றும் காணலாம்!

Published On 2024-08-22 12:14 GMT   |   Update On 2024-08-22 12:14 GMT
  • மலையைச் சுற்றி வரும்போது சஞ்சீவி மலை இருக்கும் இடம் ஒன்று வருகின்றது.
  • அவ்விடத்தில் வேப்ப மரங்கள் மிகுதியாக உள்ளன. கலுங்கல்மேடைகளும், ஒரு கிணறும் உள்ளன.

மாணிக்கவாசக சுவாமிகளும் இங்கிருந்தே இறைவனை கண்டு திருப்பாடல் பாடியுள்ளார்.

இறைவனும் அவருக்கு குருவடிவாக எழுந்தருளில் காட்சியளித்துள்ளார். இதனை மணிவாசகரே

"கணக்கிலாத் திருக்கோலம் நீவந்து

காட்டினாய்க் கழுக்குன்றிலே"

எனக் குறிப்பிட்டு உணர்த்துகின்றார்.

இத்தலத்து மலையை கிரிவலமாக சுற்றி வரும்போது சுற்று முடிவதற்குள் சிறிது தூரத்தில் மூவர்பேட்டை அமைந்துள்ளது.

மலையைச் சுற்றி வரும்போது சஞ்சீவி மலை இருக்கும் இடம் ஒன்று வருகின்றது.

அவ்விடத்தில் வேப்ப மரங்கள் மிகுதியாக உள்ளன. கலுங்கல்மேடைகளும், ஒரு கிணறும் உள்ளன.

இம்மலையைச் சுற்றி வருகின்றவர்கள், சிறிது நேரம் இங்கு உட்கார்ந்து வேப்பங்காற்றையும், துய்த்து, இம்மலையடிவாரத்தில் உள்ள செம்மண்ணை எடுத்து நெற்றியிலும், உச்சியிலும் பூசிக் கொள்வார்கள்.

இவ்வாறு பயன்படுத்தப்படும் மண், மலை மருந்து என்றும், இதனை அவ்வாறு பயன்படுத்துவதால் நோய் நீங்கும் என்றும் கூறுவார்கள். கிணற்றுநீர் சஞ்சீவி மலையின் ஊற்றுநீர் என்று அதனையும் பருகி இன்புறுவார்கள்.

இச்சஞ்சீவி மலை பகுதியை கடந்து செல்லும்போது மாணிக்கவாசகருக்கு இறைவன் திருவடிதரிசனம் தந்த திருவடிகளை காணலாம். அவற்றை கடந்ததும் சிறுகுன்றின் மேல் திருமலை சொக்கம்மாள் கோவிலை கண்டு வணங்கலாம்.

Tags:    

Similar News