ஆன்மிக களஞ்சியம்

மந்தபுத்தி மாணவர் பாடிய தோட காஷ்டகம்

Published On 2024-10-17 10:29 GMT   |   Update On 2024-10-17 10:29 GMT
  • ஒருநாள் சங்கரர், தம்முடைய சீடர்களுக்குப் பாடம் சொல்லத் தயாராக அமர்ந்தார். எல்லா சீடர்களும் அவருக்கு முன்னால் அமர்ந்தனர்.
  • ஆனால், அங்கு கிரி என்ற சீடர் காணப்படவில்லை. அவர் எங்கோ வெளியில் சென்றிருந்தார். அவருடைய வருகைக்காக சங்கரர் காத்திருந்தார்.

ஒருநாள் சங்கரர், தம்முடைய சீடர்களுக்குப் பாடம் சொல்லத் தயாராக அமர்ந்தார். எல்லா சீடர்களும் அவருக்கு முன்னால் அமர்ந்தனர்.

ஆனால், அங்கு கிரி என்ற சீடர் காணப்படவில்லை. அவர் எங்கோ வெளியில் சென்றிருந்தார். அவருடைய வருகைக்காக சங்கரர் காத்திருந்தார்.

"மந்தபுத்தி மாணவனுக்காக நம் குருநாதர் காத்திருக்க வேண்டுமா?" என்று மற்ற மாணவர்கள் பேசிக் கொண்டனர்.

வெளியில் சென்றிருந்த கிரி மிகவும் மகிழ்ச்சியுடன் நர்த்தனம் செய்து, பாடிக்கொண்டே வந்தார். அப்படி அவர் என்னதான் பாடினார்?

விகிதா கி ல ஸாஸ்த்ர ஸ§தா ஜலதே

மஹிதோப நிஷத் கதி தார்த்த நிதே

ஹ்ருதயே கலயே விமலம் சரணம்

பவ சங்கர தேசிகமே சரணம்

என்று தமது குருநாதரைக் குறித்துப் பாடியவாறு வந்தார் கிரி. தோடக விருத்தம் என்ற சந்தக் கவிதையில் தமது குருநாதரைப் போற்றி எட்டு சுலோகங்களைப் பாடினார் கிரி.

மந்தபுத்திக்காரர் என்று கருதிய மாணவர் சந்தக்கவிதை இயற்றும் திறமை பெற்றவர் என்பதை மற்ற மாணவர்கள் அப்போதுதான் உணர்ந்தனர்.

தோடக விருத்தத்தில் அமைந்த எட்டுப் பாடல்கள், 'தோடகாஷ்டகம்' என்று பெயர் பெற்றது. அதனை இயற்றிய கிரியை, 'தோடகாச்சாரியர்' என்றே அழைத்தனர்.

ஆறாயிரம் மாணவர்கள் ஆதி சங்கரரிடம் பாடம் கேட்டனர்.

எனினும், தட்சிணாமூர்த்தியிடம் பாடம் கேட்ட சனகாதி நால்வரைப் போல், சுரேஸ்வராச்சாரியர், பத்மபாதாச்சாரியர், ஹஸ்தாமலகர், தோடகாச்சாரியர் ஆகிய நால்வரும் முன்னணி மாணவர்களாக திகழ்ந்தனர்.

Similar News