ஆன்மிகம்

சந்தோஷ வாழ்வருளும் சந்தோஷி மாதா விரதம்

Published On 2016-08-23 06:41 GMT   |   Update On 2016-08-23 06:41 GMT
வாழ்வை வளமாக்கும் சந்தோஷி மாதா விரதம். இந்த விரதத்தை எப்படி அனுஷ்டிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
சென்னை விருகம்பாக்கம் மார்க்கெட் அருகில் உள்ளது பரி பூரண விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் சந்தோஷிமாதாவிற்கு சிறு சந்நதி உள்ளது. விநாயகப்பெருமானின் புதல்வியாக சந்தோஷிமாதா வணங்கப்படுகிறாள். பத்மாசனத்தில் அமர்ந்து, மேல் இரு கரங்களில் கத்தியையும் சூலத்தையும் கீழ் இரு கரங்களில் அபய முத்திரையையும் பொற்கிண்ணத்தையும் ஏந்தி தரிசனம் அளிக்கிறாள்.

இந்த அன்னையிடம் நேர்ந்து கொண்டு வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து புளி சேர்க்காமல் சமையல் செய்து எட்டு சிறுவர்களுக்கு உணவளித்தால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ரட்சாபந்தன் திருவிழா, லட்சார்ச்சனைப் பெருவிழா, விநாயக சதுர்த்தி, நவராத்திரி போன்ற நாட்களில் விசேஷமாக இந்த சந்தோஷி மாதா வழிபடப்படுகிறாள்.

பெண்கள் தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வேண்டிக்கொண்டால் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.

Similar News