ஆன்மிக களஞ்சியம்
- இருமனம் சேர்ந்து வாழ்வதுதான் திருமணம்.
- இந்த திருமணத்திற்கு முதன்மையும், முத்திரையும் ஆனதுதான் தாலி.
மாங்கல்யம் (மாங்கல்யத்திற்கு) தாலி என்ற சொல் எப்போது சொல்லப்பட்டது.
இதை தாலி என்று ஏன் சொல்கிறோம்.
இருமனம் சேர்ந்து வாழ்வதுதான் திருமணம்.
இந்த திருமணத்திற்கு முதன்மையும், முத்திரையும் ஆனதுதான் தாலி.
பெண்மகள் கழுத்தில் ஆண் மகன் இரு உறவினர்கள் முன்னிலையிலும் மற்றும் ஊரார் முன்னிலையிலும் கட்டவதுதான் தாலி என்கிறோம்.
இந்த தாலி தங்கத்தால் ஆன பொட்டுடன் மஞ்சள் சரடுடன் கட்டப்படுகிறது.
தங்கத்தால் கட்டப்படுவதால் இது தாலி என்று பெயர் பெற்றதா?
தமிழகத்தில் சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஏராளமாக சொல்லப்பட்டுள்ளன.
கருவறை முதல் கடைசி காலம் வரை மனிதனின் ஒவ்வொரு வாழ்க்கை நிகழ்வுகளிலும் சுப நிகழ்ச்சிகளும் வாழ்க்கை வளமுடன் நலமுடன் வாழ்வாதார நிலை மேம்படவும் தர்ம சிந்தனையுடன், தீர்க்க ஆயுளுடனும் வாழ்வதற்கு உருவாக்கி அமைக்கப்பட்டதுதான் சடங்குகளும், சம்பிரதாயங்களும்.