ஆன்மிகம்
முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தரும் அமாவாசை விரதம்
அமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் உரிய முறையில் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும்.
அமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும், அந்த பசியைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். இந்த நாளில் உரிய முறையில் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும்.
அன்றைய தினம் கடல், ஆறு மற்றும் புண்ணிய நதிகளின் ஓரங்களில், இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு, தாய், தந்தையர்களுக்கு திதி கொடுக்கலாம். அவ்வாறு திதி கொடுப்பதற்கு, தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு போன்ற தலங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் சிறந்த இடங்களாக குறிப்பிடப்படுகின்றன.
திதி கொடுக்கும் அன்றைய தினம், விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்வது அவசியமான ஒன்றாகும். இறந்தவர்களின் நாள்,தேதி தெரியாதவர்களும், 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி மகாளய அமாவாசை திதிகளில் திதி கொடுத்தால் ஆண்டு தோறும் திதி கொடுத்த பலன் கிடைப்பதாக ஐதீகம்.