ஆன்மிகம்

கும்ப வடிவில் வந்து அருள் தரும் குலசை முத்தாரம்மன்

Published On 2016-07-22 08:44 GMT   |   Update On 2016-07-22 08:44 GMT
ஆடித்திருவிழா குலசை முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1,2,3 (ஆடி மாதம் 17,18,19) ஆகிய மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள அன்னை முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவிற்கு பெயர் பெற்றதாகும்.

இக்கோவிலில் தசரா திருவிழாவிற்கு முன்னதாக ஆடிக் கொடை விழா நடக்கிறது. 3 நாட்கள் நடைபெறும் ஆடிக் கொடைவிழா இவ்வாலயத்தில் சிறப்புமிக்கதாகும். கொடைவிழாவின் 2&ம் நாளில் அம்மனின் கும்பம் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்முழுவதும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும். கடல் நீர் உள்ள கும்பம் வேப்பிலை சுற்றி பூ அலங்காரத்துடன் பவனி வரும் காட்சி பக்தர்களுக்கு பரவசத்தை தரும்.

கும்பத்தை வணங்கி தங்கள் துயர் போக்க வேண்டும் பக்தர்களுக்கு அருள்வடிவான குலசை முத்தாரம்மன் வேண்டிய வரம் தந்து அருள் மழை பொழிவாள். தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் இந்த ஆடித்திருவிழாவில் தான் தங்கள் விரதத்தை தொடங்குவார்கள்.

சிறப்பு மிக்க இந்த ஆடித்திருவிழா குலசை முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1,2,3 (ஆடி மாதம் 17,18,19) ஆகிய மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. விழா நாட்களில் கலைநிகழ்ச்சிகளுடன் விடிய விடிய கோவிலில் பக்கதர்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆதியும் அந்தமும் நீயே என்று மனதை ஒருநிலை படுத்தி அன்னையை சரணடைந்தால் ஆனந்த வாழ்வு கிட்டும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

Similar News