ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் கோவிலில் வசந்த உற்சவம் 19-ந்தேதி தொடங்குகிறது

Published On 2018-05-15 06:54 GMT   |   Update On 2018-05-15 06:54 GMT
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடனா திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 19-ந்தேதி வசந்த உற்சவம் தொடங்குகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடனா திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வசந்த உற்சவ விழா 9 நாட்கள் விசேஷமாக நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டிற்கான வசந்த உற்சவ விழா வருகிற 19-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை விமரிசையாக நடக்கிறது.

இதையொட்டி அக்கினி நட்சத்திர நாட்களில் வீசும் அனல் காற்று வெப்பம் தணியும் விதமாக கோவிலுக்குள் உள்ள வசந்த மண்டபத்தில் தண்ணீர் நிரப்பட்டு குளிர்ச்சி ஏற்படுத்தப்படும்

இந்தநிலையில் திருவிழாவையொட்டி 9 நாட்களும் தினமும் மாலை 6.30 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அங்கு தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கின்றன.

வசந்த உற்சவ திருவிழாவில் தங்கம், பவளம், வைடூரியம் போன்ற நகை அணிகலன்களால் ஆன விஷேசமான மகா அலங்காரமும், மல்லிகைப் பூக்கள் மகத்தான அலங்காரமும் செய்யப்படுகிறது. இந்த அலங்காரங்கள் பார்ப்பவரை பக்தி பரவசப்படுத்தி, மெய்சிலிர்க்க வைப்பது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். 
Tags:    

Similar News