ஆன்மிகம்

நெல்லையப்பர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு - சிறப்பு அபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2018-05-26 06:00 GMT   |   Update On 2018-05-26 06:00 GMT
நெல்லையப்பர் கோவிலில் நாளை கலசாபிஷேக பூஜையும், சுவாமி, அம்பாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 27-ந்தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து 28-ந்தேதி மண்டல பூஜை தொடங்கியது. இந்த பூஜை நாளை(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு அம்மன் சன்னதியில் 1008 சங்காபிஷேகமும், 9 மணிக்கு 1008 கலசாபிஷேக பூஜையும், சுவாமி, அம்பாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. பகல் 11 மணிக்கு ஆனிப்பெருந்திருவிழா பந்தல் கால் நாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. பகல் 1 மணிக்கு ஆறுமுகநயினார் சன்னதியில் வைத்து அன்னதானம் நடக்கிறது.

இரவு 7 மணிக்கு சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன் தங்க சப்பரத்திலும், விநாயகர் மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த தகவலை கோவில் செயல் அலுவலர் ரோஷினி தெரிவித்து உள்ளார். 
Tags:    

Similar News