ஆன்மிகம்

சாத்தூர் பெருமாள் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2018-06-21 09:10 GMT   |   Update On 2018-06-21 09:10 GMT
சாத்தூரில் உள்ள பழமை யான கோவிலான வெங்கடாஜலபதி கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சாத்தூரில் உள்ள பழமையான கோவிலான வெங்கடாஜலபதி கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. உற்சவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

12 நாட்கள் நடைப்பெறும் விழாவின் ஒவ்வொரு நாளும் கருடவாகனம், சே‌ஷ வாகனம், அன்னவாகனம், குதிரை வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ம் தேதி நடைப்பெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுந்தரராசு, தக்கார் சுமதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News