ஆன்மிகம்

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 4-ந்தேதி நடக்கிறது

Published On 2018-10-01 05:06 GMT   |   Update On 2018-10-01 05:06 GMT
தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றானதும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதுமான திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வருகிற 4-ந்தேதி நடக்கிறது.
தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றானதும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதுமான தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறந்து விளங்குகிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர்.

இந்த கோவிலில் குருபகவான் எங்கும் இல்லா சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளியுள்ளார். குருபகவான் தான் இருக்கும் இடத்தை விடவும், பார்க்கும் இடங்களை சுபம் பெற செய்வார். குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.

அதன்படி வருகிற 4-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. அன்று இரவு 10.05 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். வருகிற 10-ந் தேதி லட்சார்ச்சனையும், 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பரிகார ஹோமமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

குருப்பெயர்ச்சி விழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் அண்ணாதுரை நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும். வெளியூர் பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டு பலகைகள் அமைக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 
Tags:    

Similar News