ஆன்மிகம்
குமட்டகிரியில் உள்ள பாகுபலிக்கு திவ்ய திரவ பொருட்களால் மஸ்தகாபிஷேகம் நடப்பதை படத்தில் காணலாம்.

பாகுபலி சிலைக்கு மஸ்தகாபிஷேகம்: திரளான ஜெயின் துறவிகள் தரிசனம்

Published On 2018-12-03 04:03 GMT   |   Update On 2018-12-03 04:03 GMT
குமட்டகிரியில் உள்ள பாகுபலி சிலைக்கு நேற்று மஸ்தகாபிஷேகம் நடந்தது. இதில் திரளான ஜெயின் துறவிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலாவில் ஜெயின் மக்களின் புண்ணிய தலமாக கருதப்படும் கோமதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்டமான பாகுபலி சிலை அமைந்துள்ளது.

இதேபோல, மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா பிளிகெரே கிராமத்தின் அருகே உள்ள குமட்டகிரி பகுதியில் 600 ஆண்டுகள் பழமையான கோமதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் பாகுபலி சிலையும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகும். இந்த சிலை குமட்டகிரி மலையில் பாறை மீது அமைந்துள்ளது.

இந்த நிலையில் குமட்டகிரியில் இருக்கும் பாகுபலி சிலைக்கு நேற்று மஸ்தகாபிஷேக விழா நடந்தது. இதில், மடாதிபதி சாருகீர்த்தி பட்டாரக்க சுவாமி தலைமையில் இந்த மஸ்தகாபிஷேகம் நடந்தது. அப்போது பாகுபலிக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம், இளநீர், விபூதி உள்ளிட்ட திவ்ய திரவ பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

இதில் திரளான ஜெயின் மத துறவிகள் கலந்துகொண்டு பாகுபலியை தரிசனம் செய்தனர். இந்த மஸ்தகாபிஷேகத்தையொட்டி நேற்று குமட்டகிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News