ஆன்மிகம்

சிறப்பு வாய்ந்த மாரியம்மன் வழிபாடு

Published On 2018-12-31 07:54 GMT   |   Update On 2018-12-31 07:54 GMT
தமிழகத்தில் அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிறப்பு வாய்ந்த சில மாரியம்மன் கோவில்களை அறிந்து கொள்ளலாம்.
மலேசியா மாரியம்மன்

மலேசியாவில் சிரம்பான் நகரில் புத்திதிம்போ என்ற இடத்தில் 127 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் காலையில் தரிசனம் செய்யும் போது, மகா சக்தியாக அருள்காட்சி தரும் மாரியம்மன், மதிய வேளையில் கலைவாணியாகவும், இரவு பூஜையின் போது திருமகள் எனப்படும் லட்சுமி தேவியாகவும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.

கோட்டை மாரியம்மன்

திண்டுக்கல்லில் பிரசித்திப் பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் இருக்கிறது. இத்தலத்தில் உள்ள மாரியம்மன், மற்ற தெய்வங்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக தரிசனம் தருகிறாள். மாரியம்மன் சிலையின் அடிப்பகுதி பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதையுண்டு இருக்கிறது. இங்குள்ள பழமையான கோட்டை, இந்த மாரியம்மனுக்கு வேலியாக அமைந்திருப்பதால், ‘கோட்டை மாரியம்மன்’ என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

ராஜ மாரியம்மன்

கோயம்புத்தூர் ஒள்ளிப்பாளையம் என்ற பகுதியில் ராஜ மாரியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் முகப்பில் தலை வெட்டப்பட்ட விநாயகர் தரிசனம் தருகிறார். முன்காலத்தில் இந்தப் பகுதியில் இருந்த திருடர்களின் அட்டூழியம் குறித்து தன் தாய் மகாமாரியிடம், விநாயகர் புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் கொண்ட திருடர்கள், அவரது தலையை வெட்டி வீழ்த்தினர். விநாயகரின் தலை வெட்டப்பட்டதால் கோபம் கொண்ட மாரியம்மன், திருடர்களை சபித்து கல்லாக மாற்றியதாக ஆலய வரலாறு சொல்கிறது.
Tags:    

Similar News