ஆன்மிகம்

திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆகிறது

Published On 2019-01-28 03:50 GMT   |   Update On 2019-01-28 03:50 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆனது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த 2 நாட்கள் விடுமுறை என்பதால் ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி, தரிசன வரிசையில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரிசனத்துக்காக காத்திருந்தனர்.

அதில் இலவச தரிசனத்துக்கு 20 மணிநேரமும், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நடந்து வந்த திவ்ய தரிசன பக்தர்களுக்கு 6 மணிநேரமும், டைம் ஸ்லாட் பக்தர்களுக்கு 5 மணி நேரமும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்களுக்கு 5 மணி நேரமும் ஆனது.

அன்னபிரசாத கூடம், லட்டு பிரசாத கூடம் மற்றும் தலைமுடி காணிக்கை செலுத்தும் இடங்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. இதனால் பூங்காக்களிலும் சாலை ஓரமாக சொந்த வாகனங்களிலும் பக்தர்கள் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். மேலும் ஆங்காங்கே காணப்படும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
Tags:    

Similar News