ஆன்மிகம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்த போது எடுத்த படம்.

செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

Published On 2019-04-06 06:16 GMT   |   Update On 2019-04-06 06:16 GMT
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கும், நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர் களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர் சார்பில் கொண்டாடப்படுகிறது.

9-ம் நாளான வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கம்மவார் சங்கம் சார்பில், விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 10-ம் நாளான 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு ஆயிரவைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில், தீர்த்தவாரி தீபாராதனை நடக்கிறது.

11-ம் நாளான 15-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தெப்பத் திருவிழா நடக்கிறது.
Tags:    

Similar News