வழிபாடு

தெய்வ வழிபாட்டிற்கு உகந்த 27 நட்சத்திரங்களுக்கான மலர்கள்...

Published On 2023-07-01 08:18 GMT   |   Update On 2023-07-01 08:18 GMT
  • இந்த மலர்களை ஒவ்வொரு ஆலயத்திற்குச் செல்லும் போதும் பயன்படுத்துங்கள்.
  • இறைவனுக்கு இந்த மலர்களைச் சூட்டி வணங்குங்கள்.

இந்த மலர்களை ஒவ்வொரு ஆலயத்திற்குச் செல்லும் போதும் பயன்படுத்துங்கள். அதாவது இறைவனுக்கு இந்த மலர்களைச் சூட்டி வணங்குங்கள். உங்களுடைய பூஜையறையில் தவறாமல் பயன்படுத்துங்கள். அலுவலகத்திலும், தொழில் செய்யும் இடத்திலும் வியாபார தலங்களிலும் இந்த மலர்களை வைத்துக் கொள்வது நல்ல பலன்களைத் தரும்.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நட்சத்திரத்திற்கான மலர்களை தெய்வ வழிபாட்டில் அவசியம் பயன்படுத்துங்கள். நீங்கள் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் இந்த மலர்களைப் பயன்படுத்துவதும், உங்கள் வீட்டு பூஜை அறை, அலுவலகம், தொழிலகம், வியாபார ஸ்தலங்கள் முதலான இடங்களில் பயன்படுத்துவதும் நல்ல பலன்களைத் தரும்.

மன அமைதியை உண்டாக்கும். நல்ல சிந்தனையைத் தரும். இவற்றைத் தவறாமல் பயன்படுத்துங்கள். மிகக்குறுகிய காலத்திலேயே நல்ல மாற்றத்தை நிச்சயமாக நீங்கள் உணருவீர்கள்!

அஸ்வினி - சாமந்தி

பரணி - முல்லை

கார்த்திகை - செவ்வரளி

ரோகிணி - பாரிஜாதம், பவளமல்லி,

மிருகசீரிடம் - ஜாதி மல்லி

திருவாதிரை - வில்வப் பூ, வில்வம்

புனர்பூசம் - மரிக்கொழுந்து

பூசம் - பன்னீர் மலர்

ஆயில்யம் - செவ்வரளி

மகம் - மல்லிகை

பூரம் - தாமரை

உத்திரம் - கதம்பம்

அஸ்தம் - வெண்தாமரை

சித்திரை - மந்தாரை

சுவாதி - மஞ்சள் அரளி

விசாகம் - இருவாட்சி

அனுஷம் - செம்முல்லை (செந்நிற மலர்கள்)

கேட்டை - பன்னீர் ரோஜா

மூலம் - வெண்சங்கு மலர்

பூராடம் - விருட்சி (இட்லிப்பூ)

உத்திராடம் - சம்பங்கி

திருவோணம் - ரோஜா

அவிட்டம் - செண்பகம்

சதயம் - நீலோற்பவம்

பூரட்டாதி - வெள்ளரளி

உத்திரட்டாதி - நந்தியாவட்டம்

ரேவதி - செம்பருத்தி

Tags:    

Similar News