வழிபாடு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா 23-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-02-20 08:13 GMT   |   Update On 2023-02-20 08:13 GMT
  • இந்த விழா மார்ச் 3-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
  • தெப்பத்திருவிழா மார்ச் 2-ந்தேதி நடக்கிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருப்பள்ளி ஓடம் திருநாள் எனப்படும் தெப்பத்திருவிழா வருகிற 23-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நம்பெருமாள் தினமும் காலையில் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பாடாகி வழிநடை உபயம் கண்டருளிகிறார்.

மேலும் தினமும் மாலையில் ஒவ்வொரு வாகனத்தில் புறப்பாடாகி உள்வீதிகளில் வலம் வருகிறார். தெப்பத்திருவிழாவின் முதல் நாளான 23-ந்தேதி ஹம்ச வாகனத்திலும், 24-ந் தேதி அனுமந்த வாகனத்திலும், 25-ந்தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், 26-ந்தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 27-ந் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 28-ந்தேதி யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளுகிறார்.

திருவிழாவின் 7-ம் நாளான மார்ச் 1-ந்தேதி நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8-ம் நாளான 2-ந் தேதி நடைபெறுகிறது. 9-ம் திருநாளான 3-ந் தேதி ஒற்றை பிரபை வாகனத்தில் பந்த காட்சி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags:    

Similar News