வழிபாடு

திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்டபோது எடுத்த படம்.

தண்டு மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2023-04-19 06:45 GMT   |   Update On 2023-04-19 06:45 GMT
  • 25-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
  • 28-ந்தேதி தமிழ் முறை லட்சார்ச்சனை நடக்கிறது.

கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று காலை 6.45 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமம், முகூர்த்தகால், சிறப்பு அபிஷேகம், கிராமசாந்தி, பம்பை உடுக்கை நிகழ்ச்சி நடந்தது. மேலும் மாலை 6.30 மணியளவில் பூச்சாட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு அபிராமி நாட்டியாலயா குழுவின் நாட்டிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளை (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் அக்னிசாட்டு நிகழ்ச்சி, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணியளவில் திருவிளக்கு வழிபாடு, இரவு 8 மணிக்கு வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

தொடர்ந்து 22-ந் தேதி இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், 23-ந் தேதி இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், 24-ந் தேதி மாலை 6 மணியளவில் திருவிளக்கு வழிபாடு, இரவு 8 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

25-ந் தேதி மாலை 6.30 மணியளவில் திருக்கல்யாண உற்சவம், இரவு 8 மணிக்கு மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, 26-ந் தேதி காலை 7 மணியளவில் சக்தி கரகம், அக்னி சாட்டு புறப்பாடு நிகழ்ச்சி, 27-ந் தேதி காலை 9 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், காலை 11 மணிக்கு மஞ்சள் நீர், இரவு 7 மணிக்கு கொடி இறக்குதல், இரவு 8 மணிக்கு கம்பம் கலைத்தல், 28-ந் தேதி காலை 6 மணிக்கு தமிழ் முறை லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெறும். 30-ந் தேதி காலை 7 மணிக்கு சங்காபிஷேகம், இரவு 7 மணிக்கு வசந்த உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News