கால்பந்து
null

யூரோ 2024: ஹங்கேரியை 2-0 என வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஜெர்மனி

Published On 2024-06-20 02:31 GMT   |   Update On 2024-06-20 02:39 GMT
  • ஹங்கேரி அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.
  • அந்த அணி முதல் கோலை அடித்தது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் ஹங்கேரி அணிகள் மோதின. இந்த போட்டியில் ஹங்கேரி அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.

முந்தைய போட்டியில் சுவிட்சர்லாந்து அணியை வெற்றி பெற்ற நிலையில், ஹங்கேரியை வீழ்த்தும் முனைப்பில் ஜெர்மனி அணி விளையாடியது. போட்டியின் முதல் பத்து நிமிடங்களில் ஜெர்மனி களத்தில் செட் ஆகும் வரை மட்டும் ஹங்கேரி வீரர்கள் ஆதிக்கம் இருந்தது. திடீரென இந்த நிலையில், மாற்றம் ஏற்பட்டது.

ஜெர்மனி வீரர்கள் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். இதற்கு பலன் அளிக்கும் வகையில், ஜெர்மனி அணி முதல் கோலை அடித்தது. இதைத் தொடர்ந்து ஹங்கேரி அணி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது. முதல் பாதியில் ஜெர்மனி அணி ஒரு கோலில் முன்னிலை வகித்தது.

எனினும், இரண்டாவது பாதியிலும் கோல் அடிக்கும் முனைப்பில் ஜெர்மனி தீவிரம் காட்டியது. அந்த வகையில் ஜெர்மனி வீரர் குண்டோகன் தனது 19 வது சர்வதேச கோல் அடிக்க, அந்த அணி 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து போட்டி முழுக்க ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் ஜெர்மனி அணி 2-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஜெர்மனி அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஹங்கேரி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News